Samayam Tamil
அரசு ஊழியர்கள் சொந்த வீடு கட்டுவது இனி ரொம்ப ஈஸி: 2026 HBA முன்பணம் ரூல்ஸ் மறுவெளியீடு
GO No 193 என்ற அரசாணை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் முன்பணத்திற்கான பழைய விதிகள் மாற்றி, உரிய திருத்தங்களை உள்ளடக்கிய ரூல்ஸ் 2026 மறுவெளியீடாக இடம்பெற்றுள்ளது. இது மிக எளிமையாக மாற்றப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறுகின்றனர்.