Indian Express Tamil
4 நாளில் ரூ.500 கோடியை நெருங்கிய ராமாயணம்; ரன்பீர் கபூர் படைத்த வசூல் சாதனை
ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ராமாயணம் பாகம் 1 திரைப்படம், தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து உலகளவில் ரூ.500 கோடி வசூலை நெருங்கியுள்ளது. படத்துக்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், தீபாவளி விடுமுறையும் வசூலுக்கு உதவியுள்ளன. பண்டிகைக்கு முந்தைய நாட்களில் திரைப்படங்கள் எதிர்பார்த்த வசூலைப் பெறாது என்ற நிலையை இப்படம் முறியடித்துள்ளது. திரைப்படங்களின் வசூலைக் கண்காணிக்கும் Sacnilk தகவலின்படி, ராமாயணம் பாகம் 1 திரைப்படம் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தி பதிப்பில் மட்டும் 21,770 காட்சிகள் மூலம் ரூ.56.15 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் ரூ.285.20 கோடியாக உயர்ந்த…