IBC Tamil
திருமணமான 17 நாட்களில் பலியான மாப்பிள்ளை: சடலங்களாக மீட்க்கப்பட்ட 4 இளைஞர்கள்
தெனியாய பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன 4 இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நால்வரில் ஒருவர் கடந்த 17 நாட்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று, கொழும்பின் முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியியலாளராக பணியாற்றிய 34 வயது பிஷான் பிரபாத்வர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.