Indian Express Tamil
நாங்கள் பரிந்துரை செய்த பட்டியலில் 'திரிஷா விஜய்' இல்லை; அதிகாரிகள் மட்டத்தில்தான் தவறு: எழுத்தாளர் அழகிய பெரியவன்
நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும் என எழுத்தாளர் அழகிய பெரியவன் தெரிவித்துள்ளார். கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ மையத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தி எழுதியிருந்தார். இதையடுத்து, தரம் குறைந்த புத்தகங்கள் வாங்கியது மட்டுமன்றி, நூல்களின் ஆசிரியர்கள் பெயர்களில் போலிப் பெயர்களைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மதிப்பில் அதிக விலைக்குப் புத்தகங…