Nakkheeran
”பட்டாசு சத்தத்திற்கு இணையாக கொ@ல சத்தங்களும்....”; தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
தீபாவளி தினமான நேற்று (08-11-26) ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு காவல் துணை ஆய்வாளரும் கொலை செய்யப்பட்டுள்ளது சமூகத்தில் வன்முறையின் உச்சத்தை வெளிக்காட்டுவதாகவே உள்ளது. இந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடந்துள்ள சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பலரும் அரசுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன…