Polimer News
நண்பர்கள் பேச்சைக் கேட்டு மனைவியைக் கொலை செய்த இளைஞர்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுபோதையில் இருந்த நண்பர்களின் பேச்சைக் கேட்டதால் 10 மாத கால திருமண வாழ்க்கை கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த அஜித்குமார் - சுவேதா தம்பதி 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று தீபாவளி என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அஜித் குமார் மது அருந்தியுள்ளார். அப்போது சுவேதாவின் நடத்தை குறித்து நண்பர்கள் தவறாக கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர் இதை நம்பி தனது மனைவியுடன் சண்டையிட்டு ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வெட்டியதில் சுவேதா உயிரிழந்தார். அஜித்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வர…