உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டுக்கு தவறான பெயர் ஏற்பட்டு விடும்'-அன்புமணி கடும் கண்டனம்

தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளில் காவலர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை காப்பதில் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீபஒளி திருநாளில் சென்னை முதல் தேனி வரை பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை வியாசர்பாடியில் முன்பகை காரணமாக தனுஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் மேகலா என…