IBC Tamil
மழை வெள்ளத்தில் மூழ்கிய ஹட்டன் நகரம்
மலையகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஹட்டன் பிரதான பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஹட்டன் நகரின் பிரதான வீதியிலும் மழைநீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமினிபுர பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் வரும் அதிக அளவு வெள்ள நீரானது தேங்கி நிற்பதால், அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கையும் வி...