உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஏரியில் மூழ்கி 4 மாணவிகள், ஒரு பெண் வார்டன் உயிரிழப்பு..!

திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகளும், பெண் வார்டன் ஒருவரும் தண்ணிரில் மூழ்கி உயிரிழந்தனர். அரசு உதவி பெறும் டெரிடெஸ் குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்துவருகின்றனர். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டுத் திரும்பியவர்களில் சிலர், பெண் வார்டன் உடன் சமுத்திரம் ஏரிக்குச் சென்று குளித்துள்ளனர். 4 மாணவிகள் நீரில் மூழ்கி தத்தளிப்பதை கவனித்த பெண் வார்டன் தேன்மொழி, அவர்களை காப்பாற்ற ஏரிக்குள் இறங்கியபோது அவரும் சேர்ந்து அவர்களுடன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. ஆட்சியர் வந்தனா கார்க் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.