Indian Express Tamil
திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் தங்கி படித்த 4 மாணவிகள் ஏரியில் மூழ்கி மரணம்: காப்பாற்ற சென்ற பெண் பாதுகாவலரும் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் அரசு காப்பகத்தில் தங்கி படித்து வந்த 4 சிறுமிகள் ஏரியில் ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கிய நிலையில், அவர்களை காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்த விடுதி பெண் பாதுகாவலர் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை – பெரும்பாக்கம் சாலையில் உள்ள ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அரசு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த விடுதிக்கு பின்புறம் சமுத்திரம் என்ற ஏரி இருக்கிறது. திர…