Indian Express Tamil
கன்னிமாரா நூலகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு: 'அகல் விளக்கு' பதிப்பக உரிமையாளரிடம் விஜிலன்ஸ் விசாரணை தொடங்கி விட்டதாக அறிவிப்பு
கோவை பெரியார் அறிவுலக நுலகத்திற்கு ஏ.ஐ. மூலம் தயாரிக்கப்பட்ட போலி நூல்களை கொள்முதல் செய்து முறைகேடு செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் 523 போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 'அகல் விளக்கு' பதிப்பக உரிமையாளரிடம் விஜிலன்ஸ் விசாரணை தொடங்கி விட்டதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், கன்னிமாரா நூலகத்தில் புத்தகம் என்ற பெயரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த போலி நூல்களை கண்டுபிடித்துள்ளோம். கன்னிமாராவில் மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்தின் 5…