உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இரண்டரை மணி நேரப் போராட்டம்; சாக்கடை கால்வாயில் சிக்கிய நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஆழமான சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து சிக்கிய குட்டி நாயை, தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி நூதன முறையில் உயிருடன் மீட்டனர். சாக்கடை முழுவதும் கான்கிரீட் தளங்களால் மூடப்பட்டிருந்த நிலையிலும், தீயணைப்பு வீரர்கள் காட்டிய மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. பூமார்க்கெட் லைட்ஹவுஸ் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் குட்டி நாய் ஒன்று தவறி விழுந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். வீடியோவைப் பாருங…