Indian Express Tamil
ரயில் சேவையில் மாற்றம்: அரக்கோணம் - திருச்சானூர் இடையே ரயில்கள் பகுதி நேரமாக ரத்து
ரேணிகுண்டா யார்டில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக அரக்கோணம் – திருச்சானுர் வழித்தடத்தில் இயங்கும் ரயில் பாதியளவாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ரேணிகுண்டா ரயில் நிலைய வளாகத்தில் (Renigunta Yard) பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, 2026 நவம்பர் 10 முதல் டிசம்பர் 27 வரை அரக்கோணம் மற்றும் திருச்சானூர் இடையே இயக்கப்படும் சில மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU) ரயில் சேவை…