உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வணிக வளாகக் கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு-நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவில் அருகே சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 9 கடைகள் உள்ளன. ஏற்கெனவே கடைகள் நடத்தி வந்த பயனாளிகளை வெளியேற்றிவிட்டு, கட்டிடங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே கடைகள் பயன்படுத்திய சிலருக்கு மட்டுமே மீண்டும் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 கடைகளை வெளிமாவட்டங்களில் வசித்தவர…