Indian Express Tamil
மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: தந்தை, மகன் உட்பட 3 பேர் பரிதாப பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் இன்று நடைபெற்ற கொடூர சாலை விபத்தில் தந்தை, மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மேலூர் அருகேயுள்ள அழகர் கோவில் சாலையில் புலிப்பட்டி நோக்கி தந்தை ஆறுமுகம் மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பலமாக மோதியது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மேலூர் போலீசார், விபத்து நிகழ்ந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொடூர விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த ஆறுமுக…