Indian Express Tamil
ஆச்சரியக்குறி அரசு துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்குமா? அரசியல் தலைவர்கள் கேள்வி
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன் பகுதி குறைகளைத் தெரிவிக்க வந்த கார்த்திக் குமார் என்பவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியது உண்மை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்கள். அட்டக்கத்தி சி.எம் விஜய் வாயைத் திறந்து பேசுவாரா? தி.மு.க கேள்வி தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர்…