உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பள்ளி மாணவ, மாணவியர் 6 பேர் மாயம் : அடுத்தடுத்து எழுந்த புகார்!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தடாபட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் – ஜோதி தம்பதியினரின் மகள்களான மகாலட்சுமி, பத்தாம் வகுப்பும், மகேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளின் பெற்றோர் இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் , இந்த மாணவிகள் இருவரும் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் உறவினரின் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல், அவர்களது உறவினரான தடாபட்ட…