Indian Express Tamil
வாகனத்தில் அடிப்பட்டு சாலையில் படம் எடுத்த நாகப்பாம்பு; சாதுர்யமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்கள்: வைரல் வீடியோ
கோவை, கோல்ட்வின்ஸ் பகுதியில் பிரதான சாலையைக் கடக்க முயன்ற நாகப்பாம்பு ஒன்று வாகன மோதியதில் காயம் அடைந்து, நடுரோட்டில் தலையைத் தூக்கிச் சீறிய சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை, அவினாசி சாலையில் உள்ள கோல்ட்வின்ஸ் பகுதியில் இன்று மாலை சுமார் 3:15 மணி அளவில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று திடீரெனச் சாலையைக் கடக்க முயன்று உள்ளது. அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாகப் பாம்பின் மீது மோதியதில் அதற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகப்பாம்பு, சாலையில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற வாகனங்களைப் பார்த்துத் தன் படமெடுத்து சத்தமாக…