Dinamani, Sports
லா லிகா கால்பந்து: அட்லெடிகோவை வென்றது பாா்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 2-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் அட்லெடிகோ வீரா் கிலியானோ சிமோன் 10-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். பாா்சிலோனா முதல் கோல் வாய்ப்புக்காகப் போராடி வந்த நிலையில், 45-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் ஃபொ்மின் லோபஸ் கோல் அடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 66-ஆவது…