Indian Express Tamil
லாபமும், பணப்புழக்கமும்; தீபாவளி விற்பனை அதிகரிக்கிறதா? வணிகர்களின் உண்மையான லாபம் அதிகரிக்கிறதா? ரீட்டெயில்ஜி நிறுவனர் பதில்
பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பல கடைகளில் ஆஃபர் வழங்குவார்கள். இந்த காலக்கட்டத்தில் அதிகம் விற்பனை ஆகும். ஆனால், தீபாவளி பண்டிகையால் விற்பனை அதிகரிக்கிறதா? அல்லது வணிகர்களின் உண்மையான லாபம் அதிகரிக்கிறதா? என்ற கேள்வி இருக்கிறது. இந்த கேள்விகள் குறித்து பதில் அளித்துள்ள ரீட்டெயில்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.அருண்குமார், விற்பனை வளர்ச்சி மட்டும் வெற்றியல்ல, லாபமும் பணப்புழக்கமும் முக்கியம் என்று கூறியுள்ளார். தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகைப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக மக்…