உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தொடரும் சர்ச்சைகள்’; எம்.எல்.ஏக்கள் அனைவரும் பனையூருக்கு வர தவெக அவசர உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) ஆலோசனைக் கூட்டம் நாளை (11-11-26) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவொடப்படுள்ளது. கடந்த சில தினங்களாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம், துணை சபாநாயகர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளைக் கட்சித் தலைமை வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின…