Vikatan
கந்த சஷ்டி விரதம்: 'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - ஆறுமுகன் நம் மனதில் இன்று உதிக்கட்டும்...
தட்சன் பக்தன்தான். பக்தியாலும் தவத்தினாலும் முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் பிரபஞ்சத்துக்கு எடுத்துக் காட்டியவன். பிரபஞ்சத்தின் முதல் மகளே தனக்கு மகவாக வரவேண்டும் என்று வரம் கேட்டான். அப்போது அந்த ஆதி ஈசன் தன் மருமகன் ஆவான் என்கிற ஆசை. ஆசைப்படுவதில் தவறென்ன இருக்கிறது... அதுவும் தவம் செய்யும் துணிவும் வலிமையும் இருக்கும் ஒருவனுக்கு... அவன் கனவு நிஜமானது. வேண்டுதல் பலித்தது. அன்னை ஆதி சக்தி அவன் மகளாக…