உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அபுதாபி அமைதி மாநாட்டிற்கு முன் மோடி - ஜெலென்ஸ்கி பேச்சு: உணவு வழித்தடம் அமைக்க இந்தியா மத்தியஸ்தம்

Shubhajit Roy அபுதாபியில் அமெரிக்கா தலைமையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறவுள்ள இரு நாள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இந்தியா திங்கள்கிழமை கியவ் மற்றும் மாஸ்கோவின் உயர்மட்ட அரசியல் தலைமையைத் தொடர்பு கொண்டு பேசியது. பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். அதே வேளையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேசினார். பிரதமர் மோடியுடனான உரையாடலுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் (X) பதிவிட்ட ஜெலென்ஸ்கி, "கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுப்பது குறித்து" விவாதித்ததாகவும்,…