Polimer News
அமெரிக்காவில் பலத்த காற்றில் சிக்கி தலைகுப்புறக் கவிழ்ந்த சிறிய ரக விமானம்..
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா அனா ((Santa Ana)) விமான நிலையத்தில் பலத்த காற்றின் காரணமாக செஸ்னா ((Cessna)) ரகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய விமானம் இழுத்துச் செல்லப்பட்டு தலைகுப்புறக் கவிழ்ந்தது. விபத்து நேரிட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போயிங் ((Boeing)) பயணிகள் விமானத்தின் எஞ்சினில் இருந்து வெளியேறிய அதிவேகக் காற்று ((Jet blast)) காரணமாகவும் இந்த சிறிய ரக விமானம் நிலைதடுமாறியதாக கூறப்படுகிறது. கலிபோர்னியாவில் "சாண்டா அனா காற்று" ((Santa Ana winds)) என்ற பலத்த வறண்ட காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்த நிலையில் விபத்து நேரிட்டது.