உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முயற்சி செய்த ‘குட்டி ஆபீசர்’! | என் மன வானில்

நகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்த எனக்கு ஒரு கிராமத்து அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த முதல் நாள் நினைவிலிருந்து அகலாது. அன்று நான் சந்தித்த மாணவர்களின் பேச்சு வழக்குகூட வித்தியாசமாக இருந்தது. அதிலும் மாணவன் முத்துராஜாவின் தலையில் வைத்த எண்ணெய்க் காதோரமாக வடிந்து முகத்துக்கு ஒரு பளபளப்பைக் கொடுத்தது. முதல் நாளன்று கண்களில் மிரட்சியோடு என்னைப் பார்த்தவன். ஆங்கில பாடங்களை வாசித்துக் காட்டும்போது, மாணவர்கள் என்னுடனே…