IBC Tamil
டிசம்பரில் அதிகரிக்கப்போகும் முட்டை விலை
இலங்கையில் முட்டை ஒன்றின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 47 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக முட்டை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலைகள் சுமார் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் முட்டை விலை படிப்படியாக உயர்வதற்குக் காரணமாக இருக்கிறது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 32 முதல் 34 ரூபா வரை காணப்படுகின்றது. ...