உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரே ஆண்டில் 3 படங்கள்... மூன்றும் ரூ.100 கோடி கிளப்; சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

தமிழ் சினிமாவில் 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன் ஆகிய மூன்று படங்களும் தொடர்ந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான கிரைம் காமெடி திரைப்படமான சீன், வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.117 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று படங்கள் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையை சூர்யா படைத்துள்ளார். இதற்கு முன்பு வெளியான கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.310 கோடியையும், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ.209 கோடியையும…