IBC Tamil
யாழில் முளைத்த திடீர் பணக்காரர்கள் அச்சத்தில் - தீவிரமாகும் விசாரணை
யாழில் திடீர் பணக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமாக சொத்து குவித்தவர்கள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில், குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை மா அதிபரின் கீழ் இயங்கும் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.