IBC Tamil
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வளிமண்டலக் குழப்ப நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். குறித்த வானிலையானது நாளை 11 மணியளவில் உருவாகக்கூடும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். இந்த வளிமண்டலக் குழப்ப நிலை, அதனைத் தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ...