Nakkheeran
ராங்கால்! அரசியலுக்கு ஆழம் பார்த்த திரிஷா!
"ஹலோ தலைவரே, கோவையில் திரிஷா நடத்திய ரோட் ஷோ பரபரப்பா பேசப்படுதே?'' "ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன், கொஞ்சம் விவரமா சொல்லுப்பா..'' "கோவை காந்திபுரம் நூறடி சாலையில் மொபைல் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்பதாக கோவை வந்த நடிகை திரிஷா, கடையைத் திறந்து வைத்தார். நடிகை வருகிறார் என்பதால் திரிஷாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற் பட்டோர் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடை திறப்பு விழாவை முடித்துக்கொண்டு புறப்படும்பொழுது நடிகை திரிஷா ரசிகர்களையும் பொது மக்களையும் பார்த்து கையசைத்து, ஹார்ட் சிம்பல் காண்பித்தும், சிலருக்கு கைகொடுத்தும் சுமார் 1…