IBC Tamil
5 கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட 3 பேரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு காவல் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை, மற்றும் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய மூன்று சம்பவங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ...