Indian Express Tamil
தண்ணீருக்கு அடியில் தலைகீழாக நிற்கும் காடுகள்; 1,000 ஆண்டுகளாக மிதக்கும் நகரம்: இந்த டெஸ்டினேஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நகரம் என்பது நிலத்தில், காடுகள் சூழ அமைந்திருக்கும். ஆனால், இந்த நாட்டில் ஒரு நகரம் முற்றிலும் காடுகளுக்கு மேல் அமைந்துள்ளது. அதாவது, வடகிழக்கு இத்தாலியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய தீவுகள், சேற்று நிலங்கள் மற்றும் சதுப்புநிலங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. ஆட்ரியாட்டிக் கடலை ஒட்டியிருந்த இந்த பகுதி, ஆரம்ப காலத்தில் எதிரிகளின் படையெடுப்பில் இருந்து தப்பிக்கும் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. ஆனால், சதுப்பு நிலத்தில் எப்படி கட்டடங்களைக் கட்டுவது என்பதுதான் அன்றைய கட்டட கலைஞர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. சிவப்பு, வெள்ளை என 12 ஆவிகள்; இரவு இந்த பக்கம் போனா…