Polimer News
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு - அன்பில் மகேஷுக்கு ஜாமீன் இல்லை..!
தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் அன்பில் மகேஷை தொடர்புபடுத்துவதற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ரூ.400 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்ட வழக்கில் கைதான அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடியானது. அதன் விசாரணையின்போது, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெருந்தொகை வசூலிக்கப்பட்டு கட்சி நிதி என்ற பெயரில் அன்பில் மகேஷை சென்றடைந்துள்ளது என சாட்சிகள் வாக்குமூலங்கள் அளித்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். அன்பில் மகேஷின் தொடர்பு, அரசகுமாரின் குற்றப் பின்னணி, அன்பில் மகேஷ் கைதுக்குப் பிறகு மு…