உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் உறுதி; விமானத்தில் பயணம் செய்த நபர்: ரூ.19,700 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு

எழுதியவர்: சவுமியா தியாகி டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான தொகையைத் திரும்ப வழங்க மறுத்ததற்காக, தென்னக ரயில்வே சேவையில் குறைபாடு இருப்பதாகக் கூறி, புகார் அளித்தவருக்கு ரூ.19,700 இழப்பீடு வழங்குமாறு திருவனந்தபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்குள் தான் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்துள்ளது என்றும், இந்த நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால் பணத்தை திரும்பப் பெற முடியாது என்றும் நுகர்வோர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: ஆணையத்தின் தலைவர் பி.வி. ஜெயராஜன் மற்றும் உறுப்பினர்களான பிரீதா ஜி.நா…