Indian Express Tamil
தீபாவளிக்குப் பின் இரு கடலோர நகரங்களின் காற்றின் தரம்: மும்பையில் மிதமான காற்று, சென்னையில் மோசமான காற்று - காரணம் என்ன?
எழுதியவர்: Pratip Acharya ஒரே தீபாவளிப் பண்டிகை, ஆனால் இரு கடலோர நகரங்களில் காற்றுத் தரத்தின் அளவீடுகள் முற்றிலும் வேறாகப் பதிவாகியுள்ளன. தீபாவளிக்கு அடுத்த நாளில், மும்பை நகரம் 172 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே வேளையில், சென்னை நகரம் திங்கள்கிழமை காலை வரை ‘மோசமான’ காற்றுத் தரத்தைப் பதிவுசெய்தது. சென்னையில் இயங்கும் ஏழு காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் நான்கு மையங்களில் இந்த அளவீடு 200-க்கும் அதிகமாக இருந்தது. இந்த வேறுபாட்டிற்கான முக்கியக் காரணம் காற்று வீசிய திசைதான் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இரு நகரங்களிலுமே வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந…