உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அரசியலை வீழ்த்திய அந்தரங்கம்-நந்தன் மாசிலாமணி (5)

5. அதிபருக்கும், மாஃபியாவுக்கும் தூது சென்ற அழகி! அமெரிக்க வெள்ளை மாளிகை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான ஒரு பெண்மணி ஜூடித் காம்ப்பெல் எக்ஸ்னர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி மற்றும் சிகாகோவின் மாஃபியா கும்பல் தலைவன் சாம் ஜியான்கானா ஆகிய இருவருடனும் ஒரே நேரத்தில் பாலியல் ரீதியிலான தொடர்பு வைத்திருந்த கில்லாடி பெண் மணி. இந்த பாலியல் விவகாரம் வெள்ளை மாளிகை, பாதாள உலக மாஃபியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை ஆகிய மூன்றையும் இணைத்த ஒரு மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு சர்ச்சையாக மாறியது. ஜூடித் எக்ஸ்னர், 1934-ல் நியூயார்க்கில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். மிகவும் வசீகரமான முகம…