உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பாலியல் கொடூரம்! சீரழிந்த சிறுமி!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை எண்ணி பெற்றோர் பதற, காவல்துறையோ, தட்டுத்தடுமாறி 3 நாட்களுக்குப் பின் கண்டுபிடித் துள்ளது. தனிப்படையிலுள்ள அதிகாரி ஒருவரோ, "இந்தச் சிறுமியை கண்டறிந்து ஒப்படைத்தது திண்டுக்கல் மாவட்டம் வாடிப் பட்டி பொதுமக்கள் என்பதுதான் உண்மை. எங்களுடைய காவல் நிலைய எல்லைக்குட்பட்டது அந்தச் சிறுமியின் வீடு. 10-ஆம் வகுப்பு படித்துவரும் அந்த மாணவி, காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறை வாக வாங்கவே அவரை அதட்டி யிருக்கின்றனர் அவரது பெற் றோர். அதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த 15 வயது சிறுமி உடன்படிக்கும் தன்னு டைய 15 வயது நண்பனை துணைக்கு அழைக்க, அவனும் அவனுடைய இன்னொரு 15 வயது…