உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புத்தகக் கொள்முதலில் கோடிக்கணக்கில் முறைகேடா? கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலக நூலகத்தில், தரமற்ற மற்றும் போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் அறிவுலக நூலகத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட புத்தகங்களில், குறிப்பாக 'அகல் விளக்கு' மற்றும் 'பீனிக்ஸ்' ஆகிய பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பிட்ட புத்தகங்களின் விலையைச் சந்தை மதிப்பை விட பலமடங்கு உயர்த்திப் பதிவு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்…