Indian Express Tamil
இனி 15 நாட்களில் என்.ஓ.சி அனுமதி; ஏரி இணையதளம் மூலம் நீர்நிலைகளைச் சீரமைக்க விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தவும் விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி. நீர்நிலைப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் அரசுசாரா அமைப்புகள் (NGOs), தன்னார்வலர்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், எளிமையான முறையில் இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ் (NOC) பெறுவதற்காகத் தமிழ்நாட்டின் நீர்வளத் துறை சார்பில் “ஏரி” (https://eri.tn.gov.in) என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இப்புதிய இணையதளத்தின் மூலமாக சான்றிதழ் பெறும் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சான்றிதழ் பெறுவதற்கான எளிமையான நடைமுறைகள்: முன்பு ப…