Daily Thanthi
பாமக நிர்வாகி சுட்டுக்கொலை: தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
குடியாத்தம், தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பாமக நிர்வாகி சுட்டுக்கொலை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஞானவேலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்…