Nakkheeran
“போதும் நிறுத்துங்க” - ‘சண்டியர்’ தலைப்பு விவகாரத்தில் அமீர் அதிரடி!
கமல் நடிப்பில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் ‘சண்டியர்’. இப்படத்தை அவரே தயாரிக்கிறார். ‘வீர தீர சூரன்’ பட இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இப்படத் தலைப்பிற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த ‘விருமாண்டி’ படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ என தலைப்பு வைக்கப்பட்டது. அப்போதும் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது இந்த தலைப்பால் தென் மாவட்டங்களில் இரு சமூகங்களுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்படும் என எச்சரித்திருந்தார். இதனால் படத்தின் தலைப்பு ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது. இந்த சூழலில் 22 வருடம் கழித்து மீண்டும் அதே தலை…