உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தொப்பூர் டிராஃபிக்கே வேண்டாம்... கோவை டூ பெங்களூருவுக்கு இந்த மாற்றுப் பாதையைத் தெரிஞ்சுக்கோங்க

கோவையில் இருந்து பெங்களூருவுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வழித்தடங்கள் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பயணம் செய்யும்போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கோவை - பெங்களூரு இடையிலான பயணத்தில் தொப்பூர் வழித்தடம் அதிகம் பயன்படுத்தப்படும் பாதைகளில் ஒன்றாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பயண நேரத்தை அதிகரிக்கக்கூடும். இதனால் மாற்றுப் பாதைகளைத் தேடும் வாகன ஓட்டிகளுக்கு திம்பம் மலைப்பாதை ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். சமீபத்தில் கோவையில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற ஒருவர…