Daily Thanthi
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
தென்காசி, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சிறிய குன்றின்மீது வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மாசி பெருந்திருவிழா மற்றும் கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இன்று காலை கணபதி ஹோமமும் கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்…