உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பஞ்சாப் கிங்ஸ்-க்கு செல்லும் ஹர்திக் பாண்டியா? ஐ.பி.எல் வரலாற்றில் அடுத்த மிகப் பெரிய ஒப்பந்தம் இதுதானா?

ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) தொடரில், 10 அணிகளுக்கும் இடையிலான வீரர் டிரேடு மற்றும் ட்ரான்ஸ்பர் (பரிமாற்றம் மற்றும் இடமாற்றம்) அந்தந்த அணிகளின் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், 2027-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் மற்றும் தொடருக்கு முன்னதாக, வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் பரிமாற்றம் செய்துகொள்ளும் கால அவகாசம் நவம்பர் 17-ஆம் தேதியுடன் தற்காலிகமாக முடிவடைகிறது. தற்போதைய சுழற்சியின் கடைசி 'மினி-ஏலம்' டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது; அதற்கு முன்னதாக, தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அணிகள் அடுத்த வாரத்திற்குள் சமர்ப்ப…