Indian Express Tamil
ஜெர்மனியில் வேலை வாய்ப்பு; தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு
ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய தமிழக இளைஞர்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; ஜெர்மனியில் பிசியோதெரபிஸ்ட், கார் தொழில்நுட்ப வல்லுநர், வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் லாரி ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு தேவைப்பட்டியல் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணிக்கு தொடர்புடைய கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் B2 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார் தொழில்நு…