உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

முருக பக்தர்களே தயாராகுங்க... வயலூரில் களைகட்டிய கந்த சஷ்டி விழா; இந்த 6 நாட்களும் விசேஷம்தான்

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 10) கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக முருகப்பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில் ஒன்றாக விளங்கும் வயலூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், சிறப்பு அபிஷேகங்கள் மற்ற…