Maalaimalar
அம்பாசமுத்திரத்தில் உறவினரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது
அம்பாசமுத்திரத்தில் உறவினரின் விரலை கடித்து துப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் செக்கடி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஷ் சங்கர் (வயது 25). இவரது அத்தை மகன் அதே பகுதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (27). இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கார்த்திக் தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அதை…