Maalaimalar
கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு பதில் அளிக்காமல் வேடிக்கை பார்ப்பதா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு…