Daily Thanthi
காசா போருக்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சி; நெதர்லாந்தில் 2 லட்சம் பேர் திரண்டு பிரமாண்ட பேரணி
ஆம்ஸ்டர்டாம், காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஆம்ஸ்டர்டாம் வீதிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர். இஸ்ரேல் - காசா போர் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் போர் மற்றும் மனிதநேயமற்ற தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான வர்த்தக தடைகளை விதிக்க…