IBC Tamil
மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகள்! கஸ்ஸப்ப குழுவை கடுமையாக சாடும் சத்தாரதன தேரர்
மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகளை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என இராஜாங்கணை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுத்த புதிய அரசாங்கத்தின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் பௌத்த மத ஆடையை தவறாகப் பயன்படுத்தும் போலித் துறவிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சில தரப்...